"ஹலோ தலைவரே..…கவர்னர் ரவியின் வெளிநடப்புடன் தொடங்கிய இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், என்னுடைய இலக்கை அடைந்துவிட்டேன்னு சொல்லியதைக் கவனிச்சீங்களா?''” 

Advertisment

"ஆமாம்பா…கவனிச்சேன். அருமையான உரையாச்சே'' “

“"முதல்வர் பேசறப்போ, 2021-ல் 6ஆவது முறையா ஜெயிச்சி வந்தப்போ மகிழ்ச்சியா இருந்துச்சு. ஆனாலும், இந்தப் பொறுப்பை எப்படி செய்யப் போறேன்? மக்கள் விரும்பும் ஆட்சியை நடத்தமுடியுமா? வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேத்திடமுடியுமா?ன்னு ஒரு கவலை இருந்தது. முந்தைய அ.தி.மு.க.வின்  10 ஆண்டுகால ஆட்சியில் எல்லா துறையிலும் தமிழகம் மோசமான பின்னடைவில் இருந்துச்சு, மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டுச்சு. இத்தகைய நெருக்கடிகளையெல்லாம் சமாளிச்சு நல்லாட்சி கொடுக்கணுமேன்னு கவலை இருந்துச்சு. ஆனா, 5 ஆண்டுகால ஆட்சி நிறைவில் மனமகிழ்ச்சியா இருக்கேன். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளால் தமிழகம் தலைநிமிர்ந்திருக்கு. மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறாங்கன்னு பெருமிதமா சொன்னாரு முதல்வர் ஸ்டாலின். மேஜையைத் தட்டி ஆரவாரமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னாங்க தி.மு.க. உறுப்பினர்கள்.''” 

Advertisment

"விசில் சின்னம் கிடைச்சதில விஜய் ரொம்பவே குஷியாக இருக்கிறாராமே?''”  

"ஆமாங்க தலைவரே..… விசில் சின்னம் கேட்டு ரொம்ப நாளைக்கு முன்னமே தேர்தல் கமிசன்ல விண்ணப்பிச்சிருந்தாரு விஜய். அந்த விண்ணப்பம் மீது, தேர்தல் நோட்டிஃபிகேசன் வெளியிட்டபிறகு முடிவெடுத்துக்கலாம்னு தேர்தல் கமிஷனின் ஆணையர்கள் திட்டமிட்டிருந்தார் களாம். அதனால அந்த விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலைமையிலதான், சி.பி.ஐ. என்கொயரிக்காக டெல்லிக்கு இரண்டாவது முறையா விஜய் போனார். அப்போ சில சீக்ரெட் மேட்டரும் நடந்திருக்கு. அதுல பா.ஜ.க.வோட டெல்லி தலைமை சொன்ன கண்டிஷன்களுக்கு ஒத்துக்கிட்டாராம் விஜய். அதற்கு முதல்கட்டமாக, விஜய்க்கு மகிழ்ச்சியை தரத்தான் அவர் எதிர் பார்த்த சின்னத்தை, தேர்தலுக்கு 3 மாதம் இருக் கும் நிலையில், முன்கூட்டியே அவர் விண்ணப் பத்தை தூசுதட்டி எடுத்து தேர்தல் கமிசன் ஒதுக்கி ஆர்டர் போட்டுருச்சின்னு டெல்லி தகவல் சொல்லுது. அதுமட்டுமில்ல, விஜய்க்கு மட்டும் முன்கூட்டியே சின்னத்தைத் தந்தா தேவையில்லாத சர்ச்சை கிளம்பும்னு யோசிச்சு, கமல்ஹாசன் கட்சிக்கும் டார்ச் லைட் சின்னத்தை கொடுத்திருச்சு தேர்தல் கமிஷன்.''”  

"தமிழக பா.ஜ.க. ஏற்பாடு செஞ்ச மதுராந்தக கூட்டத்துக்கு பிரதமர் மோடி வந்துட்டுப் போனார். இந்த கூட்டம் பத்தி அமித்ஷாவுக்கு அதிருப்தியாமே?''” 

Advertisment

"ஆமாம்…தலைவரே.. மோடிஜி கலந்துக் கிட்ட கூட்டத்துல 2 லட்சம் பேர் தன்னெழுச்சியா கலந்துக்கிட்டாங்கன்னு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு தகவல் பாஸ் செஞ்சிருக்காரு. ஆனா, மத்திய உளவுத்துறையினர், கூட்டத்துக்கு வந்தவங்க, வெளியே நின்னுக்கிட்டு இருந்தவங்க வெறும் 50,000 ஆயிரம் பேர்தான்னு அமைச்சர் அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் கொடுத் திருக்காம். அதைப் பார்த்துத்தான் தமிழக பா.ஜ.க. மீது அமித்ஷாவுக்கு ஏமாற்றமாம். மாநில உளவுத் துறைகிட்டே விசாரிச்சா, மோடிஜி கலந்துக்கிட்ட கூட்டத்துல போடப்பட்ட நாற்காலிகளே 40,000 தான். அதிலும் பல நூறு நாற்காலிங்க காலியாகத் தான் இருந்துச்சுன்னு முதல்வர்க்கு ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. அதுமட்டுமல்ல, இந்த கூட் டத்துக்கு ஒன்றரைக் கோடி செலவானதா தமிழக பா.ஜ.க. கணக்கு சொல்லுதாம். கூட்டத்தை சேர்க்க றதுக்காக ஒரு வண்டிக்கு 5,000 கொடுத்திருக்காங்க. பஸ்ஸுக்கு கொஞ்சம் கூடுதலா கொடுக்கப்பட்டி ருக்கு. இப்படி செலவு செஞ்சும் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டத்தைச் சேர்க்கமுடியலை. இந்த கூட்டத்தைக் காட்டி, பா.ஜ.க. முக்கிய பிரமுகர் ஒருவர் கோடிக்கணக்கில் வசூல்செய்திருக்காரு. கூட்டத்துக்கான மேடை செட்டிங், பந்தல், எலெக்ட்ரிக்கல் ஐட்டம் உள்ளிட்ட காண்ட்ராக்டை அ.தி.மு.க.வின் எஸ்.பி.வேலுமணி, தனது பினாமி யான கோவை தங்கத்துக்கு வாங்கிக்கொடுத்தாரு. இந்த வேலையெல்லாம் செய்ய, வேலுமணியின் இன்னொரு பினாமியான பூபதி என்பவருக்கு சப்-காண்ட்ராக்ட் கொடுத்தாராம் கோவை தங்கம். அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங் களுக்கு நீதிமன்றம் விதித்துள்ள எந்த கண்டிஷன் களையும் மோடிஜியின் கூட்டத்தில் ஃபாலோ பண்ணலை.''”  

"அரசுத் துறைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகாரில் சிக்கும் அலுவலர்களை கடுமை யாக தண்டிக்காம விட்டுடுறாங்கன்னு உயரதிகாரிங்க மீது குற்றச்சாட்டு அதிகமா வருதே?''…”

"தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுது தமிழ்நாடு இ-கவர்ன்ஸ் நிறுவனம். இங்க சிவக்குமார்னு ஒரு உதவியாளர். 54 வயசாகுது. இந்த நிறுவனத்துல பல பெண்கள் வேலை பார்க்கிறாங்க. அவங்ககிட்டே ஆபாசமா நடந்துக்கிறது, ரெட்டை அர்த்தத்துல பேசறதுன்னு தொடங்கி சில சில்மிச வேலைகளை செஞ்சிருக்காரு சிவக்குமார். அவரது செக்ஸ் சேட்டைகளைப் பத்தி கம்ப்ளைண்ட் போக, அவர சமீபத்துல சஸ்பெண்ட் செஞ்சாங்க. ஆனா, இதுக்கு முன்னாடி இதே கம்ப்ளைண்ட்ல 2 முறை சஸ்பெண்ட் ஆகியிருக்காரு அவர். இது மூணாவது முறை. ஒவ்வொருமுறை சஸ்பெண்ட் ஆகும்போதும் கோட்டையிலுள்ள உயரதிகாரிகளை புடிச்சி, சஸ்பெண்டை கேன்சல் செய்யவெச்சு மீண்டும் வேலையில சேர்ந்துடுவாரு. இப்பவும் சஸ்பெண்டை கேன்சல் பண்ண வைக்க அதிகாரிகள் உதவியை நாடியிருக்காரு. இதனால பாதிக்கப்பட்ட பெண்கள் டிபார்ட்மெண்ட் மீது ஏகக் கடுப்புல இருக்காங்க.''”

"போக்குவரத்துத்துறையில வட்டாரப் போக்குவரத்து முதல்நிலை ஆய்வாளரான நல்ல தம்பி மீதும் இதேமாதிரி புகார் வந்திருக்காமே?''” 

"இந்த நல்லதம்பிய வால்பாறைக்கு சமீபத்துலதான் நியமிச்சாங்க. இதுக்கு முன்னாடி ஆலங்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத் தில் இவர் வேலைபார்த்து வந்தப்போ, ஏகப்பட்ட ஊழல்கள் மற்றும் பெண்களிடம் தவறாக அணுகி யது உட்பட பல புகார்கள் போக்குவரத்துத்துறை கமிஷனருக்கு போயிருக்கு. இதையடுத்து காத் திருப்பு பட்டியல்ல நல்லதம்பியை வெச்சிருந்தாங்க. ஆனா, இவர் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் பெண் பிரபலம் ஒருவர் மூலம் உயரதிகாரிகளிடம் பேசி, தன்மீதுள்ள புகார் ஃபைல்களையெல்லாம் க்ளியர் செய்யவெச்சு, வால்பாறைக்கு போஸ்டிங் வாங்கிட் டாரு. இதனால, ஆதாரங்களுடன் புகாரளித்த பெண்கள் எல்லாம் கடும்கோபத்தில் இருக்காங்க! இப்படி பெண்களுக்கும் ஊழல்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளில் சிக்குபவர்களை கடுமையாகத் தண்டிக்காம மீண்டும் மீண்டும் பணிவாய்ப்பு கொடுக்கிறதினாலதான் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் அதிகரிக்குதுன்னு ஒரே குற்றச்சாட்டா இருக்கு.''”

"பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுத்த பணத்தை ஏன் தனிநபர்களின் வங்கிக் கணக்கில் போடவில்லை. அதைவெச்சு தேர்தல் நேரத்துல தி.மு.க.வுக்கு ஆதரவான இம்பாக்டை ஏற்படுத்தப் பார்க்கிறீங்களான்னு சுமந்த் சி.ராமன் விமர்சனம் செய்திருக்கிறாரே...''”

“"ஆனா, இதுக்கான பதிலை தமிழக சபாநாயகர் அப்பாவு ஏற்கெனவே வேறொரு விஷயத்துல கொடுத்திருக்கார் தலைவரே. தமிழகத்தில் மழைவெள்ளத்தால பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை கையில் கொடுத்தபோது, இந்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், "அதுதான் பிரதமர் மோடி இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கி கொடுத்திருக்காரே. அதுல போடவேண்டியதுதானே'ன்னு கேள்வியெழுப்பு னாங்க. அதுக்கு சுடச்சுட பதில்கொடுத்த அப்பாவு "நாங்க போட ரெடி, ஆனா அப்படி வங்கியில போட்டா குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கலைன்னு வங்கிகள் பணத்தை எடுத்திருது. ஏ.டி.எம்.மை அதிகமா பயன்படுத்தறதா பணம் எடுத் திருது. எஸ்.எம்.எஸ். அனுப்புறதுக்குனு கட்டணம் வசூலிக்குது. சாமான்ய மக்கள்ட்ட இந்த மூணு வகையிலேயும் 37,000 கோடி வசூல் பண்ணியிருக்கீங்க. சாமான்ய மக்களுக்கு எங்க முதல்வர் கொடுக்கிற தையும் எடுத்துட்டுப் போயிட்டா நாங்க என்ன செய்றது?'ன்னு கேட்டார். அது இந்தப் பொங்கல் பரிசு விவகாரத்துக்கும் பொருந்தும்தானேன்னு தி.மு.க.வினர் பதிலடி கொடுத்திருக்காங்க.''” 

"என்னப்பா த.வெ.க. தலைவர் விஜய்யை ஒரு ஜோதிடர் கெட்டியா பிடிச்சுக்கிட்டார் போலி ருக்கே...?''

rang1

"அதைக் கேட்கிறீங்களா... ரிக்கி ராடன் பண்டிட் வெற்றிவேல்னு ஒரு ஜோதிடர். இவரைப் பற்றி நக்கீரனில் கட்டுரை வந்திருக்கிறது. இவர் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு மிகவும் நெருக்க மானவர். "முத்துசாமி வீட்டில் இருப்பவர்களெல்லாம் த.வெ.க.வுக்கு ஓட்டுப்போட தயாராகயிருக்கிறார்கள்' என அவர் யு-டியூப்பில் பேச, அது விஜய்யை மிகவும் கவர்ந்துவிட்டது. மூன்று வீடியோக்களில் விஜய் முதல்வராக வருவார் என்று வெற்றிவேல் கூற, விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகிவிட்டார். இவருக்கு டெல்லி தொடர்புகள் மிகவும் அதிகம். டெல்லியில் இருக்கும் ஒரு சி.பி.ஐ. ஆபீசரை வைத்து, என்னென்ன கேள்விகள் கேட்பார்கள், எப்படி விசாரணை செல்லும் என சில விவரங்களைப் பெற்று விஜய்க்குக் கொடுத்தாராம். இதனால் இருவரது நட்பும் நெருக்கமாக, அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்துக்கு வந்திருக்கிறார் விஜய். இவர் ஜெ., சசியையே ஏமாற்றியவர். பதிலுக்கு இவரது வீட்டை அடித்துநொறுக்கி, கார்டனுக்குக் கொண்டு வந்து இவரை வசமாகக் கவனித்தார் சசிகலா. அத்தகையவரை த.வெ.க.வின் செய்தித் தொடர்பாளராக நியமித்திருக்கிறார் விஜய். இந்த ஜோதிடர் விஜய்யை என்ன செய்யப் போகிறாரோ என வருத்தப்படுகிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.''

"ஓ.பி.எஸ். கூடாரமே காலியாகிடும் போலிருக்கே...?''

"ஆமாம் தலைவரே.. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் என ஓ.பி.எஸ். அணியிலிருந்து பலர் பல கட்சிகளுக்குத் தாவுகிறார்கள். சமீபமா கு.ப. கிருஷ்ண னும் த.வெ.க.வுக்கு வந்துசேர்ந் திருக்கிறார். அவர்களை எல்லாம் அனுப்பிவைப்பதே ஓ.பி.எஸ். தானாம். தர்மர் என்கிற எம்.பி.க் காகத்தான் எடப்பாடியிடம் சண்டை போட்டுப் பிரிந்தார் ஓ.பி.எஸ். எனச் சொல்வார்கள். அந்த தர்மர் எடப்பாடியிடம் வந்து சேர்ந்து விட்டு, என்னை ஓ.பி.எஸ்.தான்  அனுப்பிவைத்ததாக எடப்பாடி யிடம் சொல்லியிருக்கிறாராம்.''

"மறுபடியும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் விஜய்க்கும் தகராறாமே?''

"ஆமாம், விஜய்க்கான செலவுகளையெல்லாம் ஆதவ்தான் ஏற்கிறார். ஆனால், வீண் செலவுகள் வாய்ஸ் ஆப் காமன் அக்கவுண்டுகளில் வருவதை எதிர்க்கிறார். அதுகுறித்து இருவருக்குமிடையே தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது.''

"அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா தி.மு.க.வில் சேர்ந்ததில் தேர்தல் கணக்கு இருக்குதாமே?''

"ஆமாங்க தலைவரே, கோவில்பட்டி தொகுதியில் 2021 தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டு அ.தி.மு.க. கடம்பூர் ராஜூவிடம் தோற்றுப்போனார். அப்போ டி.டி.வி.தினகரன் 56,153 வாக்குகள் வாங்கியிருந்தார். வர்ற 2026 தேர்தலில், கோவில்பட்டி தொகுதியை தனக்காக தினகரன் தருவார்னு மாணிக்கராஜா எதிர்பார்த்தி ருந்தார். அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் சேர முடிவெடுத்தபோது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கான தொகுதிகளை பெற்றுத்தரு வேன்னு உறுதியளித்தார் தினகரன். ஆனால், கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ களமிறங்கவுள்ள தால் அத்தொகுதியை தினகரனின் கட்சிக்கு ஒதுக்க முடியாதுன்னு கைய விரிச்சுட்டாங்க. இதுல மாணிக்கராஜா அப்செட். தன்னை தினகரன் கை விட்டுட்டாரேன்னு விரக்தியில் தின கரனை எதிர்த்து கேள்வியெழுப்ப, அவரை கட்சியி லிருந்து நீக்கி னார் தினகரன். உடனே அவ ரை அமைச்சர் கீதாஜீவன் தி.மு.க. பக்கம் இழுத்திட்டு வந்துட்டார். கோவில்பட்டியை பொறுத்தவரை பெரும்பாலும் தி.மு.க. போட்டியிடுவதில் விருப்பம் காட்டுவ தில்லை. கம்யூனிஸ்ட் அல்லது ம.தி.மு.க.விற்குத் தான் அத்தொகுதியை கொடுத்திடும். இம்முறை அ.தி.மு.க.வின் கடம்பூர் ராஜூவை எதிர்த்து தி.மு.க. சார்பில் மாணிக்கராஜா களமிறங்குவார்னு எதிர்பார்க்கிறாங்க.''

"ஊட்டி காவல்துறையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டிருக்கே?''

rang2

"நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா பயன்பாடு அதிக மாக இருப்பதைக் கண்டுபிடித்த மாவட்ட காவல் துறையினர், தீவிரமாக மாவட்டம் முழுமைக்கும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போ ஊட்டியை சேர்ந்த குரூஸ் என்கின்ற வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததால் அவரை போலீசார் கைதுசெய்தனர்.  விசாரணை யில், ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நசீர் அகமதுக்கும் அவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் நசீர்  அகமது தலைமறைவாக,  3 தனிப்படைகள் அமைத்துத் தேடி, அவரை கோவையில் வைத்து போலீசார் கைதுசெய்து ஊட்டிக்கு  அழைத்துவந்தனர். கஞ்சா விற்பனைக் காக கேரள மாநிலம் அட்டப்பாடி அருகேயுள்ள கோட்டத்தொரை பகுதியைச் சேர்ந்த மோகனசுந்த ரம் என்ற கஞ்சா வியாபாரியிடமிருந்து கஞ்சாவை வாங்கிவந்து நீலகிரியில் விற்பனை செய்துவந்ததாகத் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார்  கோட்டதொரைக்குச் சென்று மோகனசுந்தரத்தை கைதுசெய்துள்ளனர். இந்தத் தகவலை மாவட்ட எஸ்.பி.க்கு சரியான முறையில் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழ, ஊட்டி நகர போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அருண் கூடலூருக்கும், ஊட்டி மத்திய போலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீஸ்காரர் ஜெயக்குமார் தேவாலா போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.''”

"மங்காத்தா மறுவெளியீட்டில் பிரச்சனை செய்த விஜய் ரசிகர்களை, அஜித் ரசிகர்கள் வெளுத்துவாங்கியிருக்கிறார்களாமே?''”

"நிஜம்தான் தலைவரே, நடிகர் அஜித்குமார் நடித்த "மங்காத்தா' படம் கடந்த வெள்ளிக்கிழமை யன்று தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப் பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியி லுள்ள தியேட்டரில் படம் பார்க்க அஜித் ரசிகர் கள் குவிய, அஜித் அறிமுக காட்சியின்பொழுதும் பாடல்களின் பொழுதும் த.வெ.க. கொடியினைக் காட்டி இடையூறு செய்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.  இது தேவையில்லாத வேலை என அஜித்குமார் ரசிகர்கள், விஜய் ரசிகர்களிடம் அட்வைஸ் செய்ய, அப்போதைக்கு ஒதுங்கிய விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்த காட்சியிலும் த.வெ.க. கொடியினைக் காண்பிக்க... எரிச்சலான அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை ஓட ஓட அடித்து விரட்டியிருக்கிறார்களாம்.''”

"பா.ஜ.க.வின் இந்நாள் தலைவரான நயினார் நாகேந்திரனும், அ.தி.மு.க.வின் கடையநல்லூர் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணமுரளியும் திடீரென கைகோத்திருக்காங்களாமே.. என்ன விவரம்?''”

rang3

"பா.ஜ.க.வின் முன்னாள் மாஜித் தலைவருக்கு நெருக்கமானவர் தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி. இவருக்கு கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் சீட் வாங்கிக் கொடுத்துவிட வேண்டி பகீரத பிரயத்தனம் செய்தார் மாஜி தலைவர். இருப்பினும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜான்பாண்டியனுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்தது பா.ஜ.க. இந்நிலையில் இம்முறை வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ஆனந்தன் அய்யாசாமியை களமிறக்க தேசிய தலைமை வரை போராடிவருகின்றார். பா.ஜ.க. மாஜியின் திட்டத்தினை முறியடிக்க கடையநல்லூர் எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க.வின் தென்காசி வடக்கு மா.செ.வுமான கிருஷ்ண முரளியிடம் ஒரே சாதி, உறவினர்கள் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தையைத் தொடங்கி யிருக்கிறார் நயினார் நாகேந்திரன். அதாவது, ஆனந்தன் அய்யாசாமி வெற்றிபெற்றால் மாஜி மீண்டும் கட்சியின் லைம் லைட்டுக்கு வருவார். அதனால், நம்முடைய கூட்டணியிலிருக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக ஜான்பாண்டியனை அழைத்து அவருக்கு வாசுதேவநல்லூர் தொகுதியைக் கொடுத்துவிடுவோம். அதனால் மாஜி மண்ணைக் கவ்வும் என திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.''”

rang4

"சரி, நானும் ஒரு தகவல் சொல்றேன். இலக்கம் 561, கௌரி வழி, மெக்மின் வில்லி, பச 37110-ஐ சேர்ந்த நீத்தா ஜெயகாந்தன் என்பவர், அமெரிக்கா வாரன் கவுண்டி ஷெரிப் அலுவலகத் தினை அணுகி, "எனக்கு மயக்க திரவத்தை குடிக்கக் கொடுத்து மயங் கிய நிலையிலிருந்த என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டான் ஈஷா யோகா மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ்' என  புகாரை கொடுத்தார். சான்றாவணங்களின் அடிப்படையில் ஜக்கி வாசுதேவ் மீது ரேப்  வழக்கு  (எண்: 2025-01374) பதிவுசெய்யப்பட்டது. இதுகுறித்து நக்கீரனில் நாம் விரிவாக பதிவுசெய்திருந்தோம். "இது பொய்யான குற்றச்சாட்டு. வழக்கினை தள்ளுபடி செய்து எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தமுயன்ற நீதா ஜெயகாந்தனிடமிருந்து நஷ்ட ஈடு வாங்கித் தரவேண்டும்' என்று டென்னசி ஹாமில்டன் கவுண்டி மாநிலத்தின் மாவட்ட சர்க்யூட் நீதிமன் றத்தில் வழக்கினை தொடர்ந்தார் ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ். கடந்த மூன்று மாதங் களாக நடைபெற்று வந்த வழக்கில், ‘புகாரில்  முகாந்திரம் இருக்கிறது. ஆகையால் உங்களது வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்’ என ஜக்கி வாசுதேவின் வழக்கினை தள்ளுபடிசெய்துள்ளது நீதிமன் றம். இது ஈஷா மையத்திற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.''